17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் நடைபெற்ற கொலை – தாயையும் மகளையும் திட்டியதால் தம்பியை கழுத்தறுத்து கொன்ற அண்ணன்

மதுரையில் நடைபெற்ற கொலை – தாயையும் மகளையும் திட்டியதால் தம்பியை கழுத்தறுத்து கொன்ற அண்ணன்

எழுதியவர்: mohan November 17, 2019, 1:47 pm

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் உள்ள விளாச்சேரி வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் (லேட்). இவருடைய இளைய மகன் சம்பத்(33). ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய அண்ணன் பாண்டி (36) இவருக்கு திருமணமாகி நந்தினிஸ்ரி(8) என்ற குழந்தை உள்ளது.இவர் மனைவியை பிரிந்து குழந்தையுடன் தனது வீட்டில் அம்மா மற்றும் தம்பி சம்பத் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று சிறுமி நந்தினிஸ்ரி வீட்டினுள் சிறுநீர் கழித்துவிட அதனை கண்டித்து சம்பத் மிகவும் அசிங்கமாக அண்ணன் பாண்டி மற்றும் தாயரையும் திட்டி உள்ளார்.இதனைத்தொடர்ந்து மனமுடைந்த பாண்டி இரவு முழுவதும் மது அருந்தி ஆத்திரத்தில் 17ம் தேதி அதிகாலை தம்பி சம்பத்தை கழுத்து மற்றும் நெற்றியில் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே சம்பத் பலியானார்.இதனைத்தொடர்ந்து பாண்டி திருநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.திருநகர் போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிந்து பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!