சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தேதி அன்று ஐயப்ப பக்தர்கள்
தங்கள் குருசாமி தலைமையில் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். இதன்படி நடப்பாண்டு இன்று (17.11.19) கார்த்திகை மாத பிறப்பையடுத்து இராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை சாஸ்தா ஐயப்பன் கோயிலில் குருசாமி மோகன் தலைமையில் சரண கோஷமிட்டு ஏராளமான (சிறியோர் முதல் பெரியோர்) பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இங்கிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்வது இல்லை, சபரிமலை தூய்மைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிர்ப்பீர் என்ற வாசகம் தாங்கிய இரு முடி சுமந்து புறப்படுவர்.
இராமநாதபுரம் அருகே வல்லபை சாஸ்தா கோயிலில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்
எழுதியவர்: mohan November 17, 2019, 10:51 am




You must be logged in to post a comment.