17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. அமைச்சர் பங்கேற்பு

காட்பாடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. அமைச்சர் பங்கேற்பு

எழுதியவர்: mohan November 16, 2019, 6:22 pm

வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகர் தனியார் மண்டபத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்வு முகாமில் பெறப்பட்ட தகுதியான 2,636 பேருக்கு ரூ 2.86 கோடி மதிப்பலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தாசில்தார் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வணிகவரி மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் வீரமணி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் கோட்டவருவாய் அலுவலர் கணேஷ் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன், வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு ஒன்றிய செயலாளர் சுபாஷ் முன்னாள் மாவட்ட செயலாளர் அப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலூரிலிருந்து கேஎம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!