18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெள்ளமே போனாலும்… நீர் சேகரிக்க முடியாது… மதுரை மாவட்டத்தின் அவலம்..

வெள்ளமே போனாலும்… நீர் சேகரிக்க முடியாது… மதுரை மாவட்டத்தின் அவலம்..

எழுதியவர்: ஆசிரியர் November 16, 2019, 11:30 am

மதுரை மாவட்டம் 93 வது வார்டு கீழ முத்துப்பட்டி பகுதியில் அமைந்துள்ள வீரம் உடையான் முத்துப்பட்டி கம்மாயில் ஆற்று நிறைய வெள்ளம் போனாலும் நீர் தேக்க முடியாத அவலநிலை தான் நிலவி வருகிறது.

இதற்கு காரணம் பிளாஸ்டிக் கழிவுகளும், சீமைக்கருவேல மரமும் வளர்ந்துள்ளதால் இங்கே கடைமடைக்கு திருப்பி விடப்பட்ட தண்ணீரானது கண்மாயை வந்து அடையாமல் நீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பல ஆயிரக்கணக்கான டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த  கழிவுகளை அகற்றிவிட்டு இந்த கம்மாயில் நீரை நிரப்பி நீரை சேமிக்க வேண்டும் எனவும், கோடை காலம் நெருங்கி வருவதால் அப்பொழுது குடிநீர் பஞ்சம் இருக்காது எனவும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!