18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டில்லியில் தேசிய குழந்தைகள் தினவிழா ராமநாதபுரம் மாணவர்கள் அசத்தல்..

டில்லியில் தேசிய குழந்தைகள் தினவிழா ராமநாதபுரம் மாணவர்கள் அசத்தல்..

எழுதியவர்: ஆசிரியர் November 15, 2019, 4:49 pm

பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான நவ.14ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் தின மாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன்படி, தலைநகர் டில்லியில் தேசிய குழந்தைகள் விழா நவ.14,15,16 தேதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவ.14ல் நடந்த முதல் நாள் நிகழ்ச்சியில் மதுரை மண்டலம் சவகர் சிறுவர் மன்றம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட , திட்ட ஒருங்கிணைப்பாளர் லோக சுப்ரமணியன் தலைமையில். குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற சிறுவர்கள் கேசவ நித்தீஷ், சுதர்சன், ரோஹித், ஹரீஷ் ஆகியோர் தமிழர்களின் பாரம்பரியத்தை பறை சாற்றும் ஒயிலாட்டத்திலும், எஸ்தர் அந்தோணி, விவேகா ஸ்ரீ, முகிலன், பிரஜன் குமார் ஆகியோர்  மரக்கால் ஆட்டத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ராமநாதபுரம் சிலம்பொலி சிலம்பாட்ட குழு சார்பில் கருப்பசாமி வேடமிட்ட பாரம்பரிய கலை ஆட்டம் அனைத்து மாநில கலைஞர்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!