18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழை நியூஸ் செய்தி எதிரொலியாக சாி செய்யப்பட்ட பாதாளச்சாக்கடை மூடி

கீழை நியூஸ் செய்தி எதிரொலியாக சாி செய்யப்பட்ட பாதாளச்சாக்கடை மூடி

எழுதியவர்: mohan November 14, 2019, 4:42 pm

கிழை நியூஸ் செய்தி எதிரொலியாக மதுரை மாவட்டம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு நேரு நகர் திருவள்ளுவர் நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் பாதாள சாக்கடை மூடிஉடைந்து பல மாதங்களாக இருந்தது. இதுகுறித்து நமது தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம் .இதன்படி  76 வது வார்டு மாநகராட்சி அதிகாரி  விஜயகுமார்  நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து பாதாள சாக்கடை மூடியை உடனடியாக சரி செய்தார். நீண்டகாலமாக மூடாமல் இருந்த பாதாள சாக்கடையை மூட உதவிய கீழை நியூஸ் சத்திய பாதை மாத இதழ் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர். மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் பல மாதங்களாக மூடாமல் இருந்த பாதாள சாக்கடை மூடி மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. நாங்கள் ஒவ்வொரு நாளும் குழந்தைகளை வெளியே அனுப்ப பயந்து இருந்தோம். தங்கள் செய்தியால் இன்று எங்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறந்தது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!