உசிலம்பட்டியில் விவசாயிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வைகை அணையிலிருந்து 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்தனர்.உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு நீதிமன்றத்திலிருந்து ஊர்வலமாக வந்து உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர் சங்கத்தலைவர் வீரபிரபாகரன் கூறுகையில் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தனர்.இ;ந்த ஆர்ப்பாட்டத்தில் 58 கிராம கால்வாய் பாசன சங்கத்தினரும் பங்கேற்றனர்.
உசிலம்பட்டியில் 58 கிராமபாசன விவசாயிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞா்கள்தேவா்சிலை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
எழுதியவர்: mohan November 13, 2019, 6:19 pm




You must be logged in to post a comment.