திருவண்ணாமலை டவுன் ராமலிங்கனார் தெரு மெயின் ரோட்டில் கங்கை அம்மன் கோவில் அருகில் ஆரம்பப்பள்ளி அருகில் பங்க்
கடையில் கள்ளச்சாராயம், பிராந்தி ,வகைகள் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. .இங்கு வரும் குடிமகன்கள் அதே இடத்தில் மது குடித்துவிட்டு பள்ளிப் பிள்ளைகள் மற்றும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பங்க் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகரின் மையப் பகுதியில் இயங்கிவரும் கள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
திருவண்ணாமலை நகரில் பங்க் கடையில் வைத்து மது விற்பனை நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்
எழுதியவர்: mohan November 13, 2019, 2:08 pm




You must be logged in to post a comment.