17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை-தென்காசி மாவட்டங்களில் செயல்படும் கிராமங்கள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

நெல்லை-தென்காசி மாவட்டங்களில் செயல்படும் கிராமங்கள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

எழுதியவர்: mohan November 13, 2019, 11:54 am

திருநெல்வேலி-தென்காசி மாவட்டங்களில் செயல்படும் கிராமங்கள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர்,நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் மற்றும் திசையன்விளை ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மற்றும் சேரன்மகாதேவி வருவாய் கோட்டங்களுடன் நெல்லை மாவட்டம் இயங்கும். புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் புதிய வருவாய் கோட்டமான சங்கரன்கோவில் ஆகியவையுடன் தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர்,சிவகிரி, வி.கே புதூர், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட 8 தாலுக்காக்களை கொண்டு இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் தென்காசி தாலுகா மறு சீரமைப்பின் படி கடையம் (12 கிராமம்),ஆழ்வார்குறிச்சி 13 கிராமம்,கல்லூரணி (11 கிராமம்,தென்காசி 11 கிராமம் என தென்காசி வருவாய் கோட்டத்துடனும், தென்காசியுடன் இணைக்கப்பட்ட சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில் சங்கரன்கோவில் (6 கிராமம்), குருக்கள் பட்டி (9 கிராமம்),சேர்ந்தமங்கலம் (5 கிராமம்),கரிவலம்வந்தநல்லூர் (9 கிராமம்) வீரசிகாமணி (6 கிராமம்) என 35 வருவாய் கிராமங்களுடனும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னிகோனந்தேல் பிர்கா சங்கரன்கோவில் தாலுகாவில் இருந்து பிரிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் இயங்கும். பிரிக்கப்பட்ட பகுதிகளுக்கான செயல்பாடுகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் தென்காசி மாவட்ட சிறப்பு அதிகாரி ஆகியோர் உடனடியாக மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!