17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜசிங்கமங்கலம் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

இராஜசிங்கமங்கலம் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

எழுதியவர்: mohan November 13, 2019, 11:47 am

இராஜசிங்கமங்கலம் சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராஜசிங்கமங்கலம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், கார், பேருந்து, இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால் நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். குறிப்பாக பஸ்ஸ்டாண்ட் சாலை, பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.

இந்நிலையில் போக்குவரத்து மேலும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.அவ்வப்போது சாலைகளில் கால்நடைகள் மிரண்டு ஓடுவதால், பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நூருல் அமீன், மதிவாணன், ஆசிரியர் பாதுஷா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!