18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா

எழுதியவர்: mohan November 13, 2019, 10:31 am

முஹம்மது சதக் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முஹம்மது சதக் ஐ.டி.ஐ, செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி. செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி. இராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் ஸ்கூல். முஹம்மது சதக் ஹமீதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் முஹம்மது சதக் கபீர் பப்ளிக் ஸ்கூல் இணைந்து நடத்திய நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் விழா கீழக்கரை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர், அல்ஹாஜ் எஸ்.எம்.யூசுப் சாகிப் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலாளர். ஹாஜியானி. எஸ்.எம்.ஹச். சர்மிளா. இயக்குநர். ஜனாப்.ஹமீது இப்ராகிம் மற்றும் ,இயக்குநர் ஜனாப். உசேன் ஜலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர். டாக்டர். அ.அலாவுதின் .அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் .கே. அப்துல் ரகீம் மற்றும் கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரியின் உதவி பேராசிரியர். அல்ஹாபிஸ் சிஹாபுதீன் ஜமாலி ஆகியோர் கலந்து கொண்டு நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள் மற்றும் வாழ்க்கை நெறிமுறைகள் குறித்து விரிவாக பேசினர். இந்நிகழ்ச்சியில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியின் டீன். ஜனாப். ஜெ. முகம்மது ஜகபர். செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர். ரஜபுதீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர்கள். துறைத்தலைவர்கள். மற்றும் ஆசிரியைகள் கீழக்கரை ஜமாத்தார்கள் அரபிக் கல்லூரி மாணவர்கள். முஹம்மது சதக் ஐ,டி,ஐ. மாணவர்கள். மற்றும் பொது மக்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர். அ.சேக்தாவூது அவர்கள் நன்றியுரையாற்றினார். நிழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!