18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை -குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீா்

மதுரை -குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீா்

எழுதியவர்: mohan November 13, 2019, 10:03 am

மதுரை வில்லாபுரம் பகுதியில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை  தண்ணீர் விடப்படுவது வழக்கமான ஒன்று..ஒவ்வொரு முறை தண்ணீர் விடப்படும் போதும் வில்லாபுரம் பகுதியில் ஆங்காங்கே தரையில் பதிக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் ஊற்று போல் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக போகிறது…இதேபோல் வில்லாபுரம் பகுதி முழுவதும் ஒரு நாட்களுக்கு ஒரு ஒரு பகுதிக்கு தண்ணீர் வருவது வழக்கமான ஒன்று…அப்படி தண்ணீர் திறந்து விடப்படும் போதெல்லாம் மண்ணுக்குள் இருக்கும் தண்ணீர் பைப் உடைந்து தண்ணீர் ஊற்றுதல் போல் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெளிவந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக போய் வருகிறது குடிதண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும் இந்த நிலையில் இப்படி மாநகராட்சி தரப்பில் தண்ணீர் வீணாகி போகும் அவலம் வில்லாபுரம் பகுதி மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது..எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடைந்த தண்ணீர் பைப் புகழை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!