18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கொடைக்கானலில் ‘துப்புரவு’ பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.!

கொடைக்கானலில் ‘துப்புரவு’ பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.!

எழுதியவர்: Askar November 12, 2019, 2:34 pm

துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 70க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 21 ஊராட்சிகளில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு இன்று கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் ஊராட்சி ஒன்றிய தனி அதிகாரி பிரபாகரன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இதில் மருத்துவர் சந்தோஷ் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு முழு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும், அதேபோல் இவர்கள் வீடுகளில் கழிவுகளை வாங்கும் பொழுது அதை எப்படி வாங்குவது என்றும், இவர்களுக்கும் நோய் தோற்று வராமல் எப்படி தடுப்பது,  மக்கும் குப்பை மக்கா குப்பை என்று பிரிக்கும் பொழுது அவர்கள் கையுறை மற்றும் வாய் மற்றும் மூக்கை பொருத்தி அணிவதற்கு மாஸ் மற்றும் காலுறை போன்றவைகள் அணியவேண்டும் என்றும், அவர்களுக்கு முழு சுகாதாரம் பற்றியும் விழிப்புணர்வு மற்றும் அறிவுரை கூறி அவர்களுக்கு மருத்துவ ஆய்வு செய்தனர் இதில் ஊராட்சி ஒன்றியத் உள்ள அனைத்து துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு இம்முகாமில் பயன்பெற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!