18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வைகை ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலி

வைகை ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலி

எழுதியவர்: mohan November 12, 2019, 9:50 am

மதுரை ஓபுளா படித்துறை இன்று12.11.19  அதிகாலை தேனி மாவட்டம் சின்னமனூர் சேர்ந்த .ரங்க நாதன் என்பவர் வைகை ஆற்றில் முகம் கழுவ தற்காக இறங்கியுள்ளார். அப்பொழுது கால் தவறி கீழே விழுந்தார். இதில் விரைந்து வந்த அனுப்பானடி தீயணைப்பு படையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேர தேடுதல் போராட்டத்திற்கு பிறகு அவரது உடலை மீட்டனர் .ஏற்கனவே காவல்துறை வைகை ஆற்றில் யாரும் இறங்கும் குளிக்க கூடாது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளார்கள். மேலும் ஒலிப்பெருக்கி மூலமாகவும் எச்சரிக்கையும் செய்து வரும் காவல்துறையினர். அதையும் மீறி சிலர் இதுபோன்று வைகை ஆற்றில் இறங்கி ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். நேற்று ஒருவர் ஆரப்பாளையம் அருகே வைகை ஆற்றில் இறங்கியபோது ஆற்று வெள்ளத்தில் சிக்கி சுமார் 5 கிலோமீட்டர் வரை இழுத்து வரப்பட்டு ஒரு மணல்மேட்டில் சிக்கிக் கொண்டார். விரைந்து செயல்பட்ட அனுப்பானடி தீயணைப்புத் துறையினர் அவரை உயிருடன் மீட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!