18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய கல்வி தின விழா

தேசிய கல்வி தின விழா

எழுதியவர்: mohan November 11, 2019, 4:23 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்  இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் அளிந்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.தலைமை ஆசிரியை ஜோதி வரவேற்று மாணவ மாணவிகள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார்.

மாணவர்கள் நேர்மை, ஒழுக்கம், நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு மிகச் சிறந்த தலைவர்களாக உருவாக வேண்டுமென வலியுறுத்தினார். இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்தார் .மாணவ,மாணவியர்களுக்கு ஓட்டப்பந்தய போட்டி பல்வேறு பிரிவுகளில் நடத்தி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் ஆசிரியர் இன்னாசிமுத்து, மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.உதவி தலைமை ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!