தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால (ஏப்.15-ஜூன் 15) நிவாரணம், மீன்பிடி குறைவு கால நிவாரணம் (அக்., நவ.,), தேசிய மீனவர் சேமிப்பு நிவாரணம் வழங்கப்படுகிறது.. இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டமான மீன்பிடி குறைவு கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படுகிறது.
மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராக உள்ள குடும்பத் தலைவரின் வங்கி கணக்கில் , இந்த நிவாரணம் செலுத்தப்படுகிறது. குடும்பத்தலைவர் இறந்துவிட்டால் அவரது மனைவிக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு விநியோகிக்கப்பட்ட நிவாரணம், கணவரை இழந்த மீனவ பெண்களுக்கு எவ்வித காரணமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த இராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்கள் ஏராளமானோர், இராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவிடம் இன்று (11.11.19) மனு கொடுத்தனர்.







You must be logged in to post a comment.