18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவர்கள் மத்தியில் மத்திய அரசின் பிட் இந்தியா திட்டத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்ச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி.

மாணவர்கள் மத்தியில் மத்திய அரசின் பிட் இந்தியா திட்டத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்ச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி.

எழுதியவர்: mohan November 10, 2019, 10:51 am

சமீபத்தில் மத்திய அரசு உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க உடல் பயிற்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தி பிட் இந்தியா என்னும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருந்தது.இத் திட்டம் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவும் தமிழக அரசு பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கும் சத்தான காய்கறிகள் கீரைகள் சாப்பிடுவதால் ஏற்ப்படும் நன்மை குறித்;தும் .மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவணம்பட்டி ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் மதன்பிரபுவின் பதிய முயற்சியால் மாணவர்களுக்காக கொண்டுவந்துள்ளார். இதற்காக கவணம்பட்டியைச் சேர்ந்த பழுதூக்கும் வீரரான கார்த்திக் என்பவரை வைத்து பிட் இந்தியா திட்டத்தின் நன்மைகள் குறித்தும் மாணவர்களின் முன்னிலையில் உடற்பயிற்சி செய்வது எப்படி அதன் பலன்கள் என்ன உடல்கள் ஆரோக்கியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து விளக்கமுறையும் செய்து காட்டினார்.மேலும் பள்ளித்தலைமைஆசிரியர் மதன்பிரபு தமிழக அரசு பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவில் வழங்கும் காய்கறிகள் கீரைகள் முட்டை இவற்றை தவறாமல் சாப்பிட்டு வந்தாலே உடல் ஆரோக்கிய இருக்கலாம் என்பது குறித்து விளக்கி கூறினார்.இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!