18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக முதல்வர்-ஆளுநர் திடீர் சந்திப்பு-அமைச்சரவையில் மாற்றமா?

தமிழக முதல்வர்-ஆளுநர் திடீர் சந்திப்பு-அமைச்சரவையில் மாற்றமா?

எழுதியவர்: Askar November 4, 2019, 7:14 pm

சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி 04.11.19 மாலை 5.30 மணியளவில் திடீரென சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது தமிழக முதல்வர் ஆளுநருக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பளித்தார்.

இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது. அவருடன் தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பு குறித்து தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், புதியதாக மூன்று பேர் அமைச்சர்கள் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.எனினும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!