18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கலாம் பிறந்த நாள் விழா….

இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கலாம் பிறந்த நாள் விழா….

எழுதியவர்: ஆசிரியர் November 4, 2019, 6:19 pm

இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மக்கள் பாதை அமைப்பு சார்பில்  அப்துல் கலாம் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவியர் பங்கேற்ற அறிவுத்திறன் போட்டி இன்று (04/11/2019) நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவிற்கு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் நூருல் அமீன், சரவணக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி,ஓவியப் போட்டி, வண்ணம் தீட்டுதல், கலாம் பொன்மொழிகள், கவிதை  உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி  வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் இராமநாதபுரம் ஒன்றிய மக்கள் பாதை பொருப்பாளர் ராமு, இராமநாதபுரம் நகர் பொருப்பாளர் சசிக்குமார் ,ஆசிரியர்கள், மாணவ மாணவியர், பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். உதவி ஆசிரியர் ராமேஸ்வரி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!