17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » தேசிய செய்திகள் » டெல்லியில் மாசுபாடு, பிரியங்கா காந்தி ‘பர பர’ ட்விட்டர் பதிவு.!

டெல்லியில் மாசுபாடு, பிரியங்கா காந்தி ‘பர பர’ ட்விட்டர் பதிவு.!

எழுதியவர்: Askar November 4, 2019, 5:48 pm

பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது.!

டெல்லி, நொய்டா, காஜியாபாத், கான்பூர், பனாரஸ், லக்னோ உள்ளிட்ட நகரங்கள் காற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது மிகவும் சீரியஸான விஷயமாகும். இதனால் நம்முடையா குழந்தைகள், வேலைக்கு செல்வோர், சாதாரண பொதுமக்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

காற்று மாசுபாட்டு பிரச்னையை நாம் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும். 1952-ல் லண்டனில் ஏற்பட்ட மிக மோசமான காற்று மாசுபாட்டால் 12 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்தார்கள். லட்சக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக லண்டன் மக்கள் வீதிக்கு வந்து போராடினர். இதன் விளைவாக புதிய சட்டம் இயற்றப்பட்டு மாசுபாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!