திருவண்ணாமலை மாவட்டத்தில் கரகாட்டம், தெருக்கூத்து, பம்பை, சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகளில், ஆயிரக்கணக்கான நாட்டுப்புற கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த
மனுவில் தெரிவித்துள்ளதாவது, நாட்டுப்புற கலைஞர்கள், அரசின் நாட்டுப்புற நல வாரியத்தில் அடையாள அட்டை பெறவும், நல வாரியத்தில் உறுப்பினராக சேரவும், மேலும், நாட்டுப்புற கலைர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பெறவும் கலைப்பண்பாட்டு மைய அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.கலைப்பண்பாட்டு மையத்தின் கிளை அலுவலகம், திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் செயல்பட்டு வந்தது. தற்போது அந்த கிளை அலுவலகம், காஞ்சிபுரம் தலைமை அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டுப்புற கலைஞர்கள், அலுவலக வேலை தொடர்பாக, அடிக்கடி காஞ்சிபுரம் சென்று வர, மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, கலை பண்பாட்டு மைய கிளை அலுவலகத்தை மீண்டும், திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் செயல்பட வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடமும் அளித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் நாட்டுப்புற கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு
எழுதியவர்: mohan November 4, 2019, 4:17 pm




You must be logged in to post a comment.