மதுரை மாநகர் சிங்கராயர் காலனி குடியிருப்போர் சங்கம் சார்பாக 18 CCTV கண்காணிப்பு கேமிராக்களின் திறப்பு விழாவை மதுரை
மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்,துவக்கிவைத்து மரக்கன்றும் நட்டுவைத்து சிறப்புரை ஆற்றினார். மதுரை மாநகரில் குற்றத்தை முன்கூட்டியே தடுப்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காகவும் வாகன விபத்துக்களை தடுப்பதற்கும் கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சிங்கராயர் காலனி குடியிருப்போர் சங்கத்தினருக்கு தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார். இந்நிகழ்சியில் ,காவல் உதவி ஆணையர் (தல்லாகுளம் சட்டம் & ஒழுங்கு சரகம்) அசோகன், காவல் உதவி ஆணையர், (தல்லாகுளம் குற்றப்பிரிவு சரகம்) .சந்திரன் காவல் ஆய்வாளர், தல்லாகுளம் (குற்றப்பிரிவு) மலைச்சாமி, காவல் ஆய்வாளர், தல்லாகுளம் (சட்டம் & ஒழுங்கு), சிங்கராயர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். CCTV கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட தல்லாகுளம் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய காவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுளார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.