18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாதிச்சான்று கிடைக்கவில்லை. படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் பழங்குடியின மாணவர்கள்.

சாதிச்சான்று கிடைக்கவில்லை. படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் பழங்குடியின மாணவர்கள்.

எழுதியவர்: mohan November 4, 2019, 3:04 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாதிச்சான்று கிடைக்காததால், படிப்பை தொடர முடியாமல் பழங்குடியின மாணவ, மாணவியர் தவித்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். செங்கம் அருகே உள்ள ஆனந்தவாடி, நீப்பத்துறை, ராவந்தவாடி, நாகம்மா நகர், வெள்ளாளம்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பழங்குடியின, இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் சாதிச்சான்று கேட்டு பல முறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இவர்களின் மனுக்கள் கிடப்பில் உள்ளது. இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், தங்கள் பிள்ளைகளின் கல்வி உதவித்தொகை, அரசு உதவிகள், கல்வி மேற்படிப்பு ஆகியவை பெறமுடியாமல், தவித்து வருகின்றனர். எனவே தங்களுக்கு உடனடியாக சாதிச்சான்று வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!