18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

சென்னை நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

எழுதியவர்: mohan November 4, 2019, 12:18 pm

சிவகாசியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ஒ.ஏ.நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தின் போது அவர் கூறுகையில், ”படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர், அழிந்து விட்டது.விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி விவசாயிகளுக்கு இன்னும் காப்பீட்டு தொகை வழங்கவில்லை. இதை கண்டித்து வரும் நவ.13 அன்று சென்னையில் நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி முன்பு துாத்துக்குடி, விருதுநகர் மாவட்ட தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட அழகர் அணை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், கும்பிலங்குளம் ஸ்ரீராம், மயூர் நாதபுரம் சுப்புராம் சுப்புராஜ் பஜனை கிருஷ்ணன், குமார லிங்கபுரம் குமார், முருகேசன், கிச்சன் நாயக்கன்பட்டி கண்ணன், துரைச்சாமிபுரம் சீனி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!