17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » துப்புரவு பணியாளர்களின் அவலநிலை

துப்புரவு பணியாளர்களின் அவலநிலை

எழுதியவர்: mohan November 4, 2019, 11:51 am

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பகுதியில் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் மேலும் குப்பைகளை எடுத்து செல்ல போதுமான வாகன வசதியும் இல்லாமல் சாதாரண சாக்குப்பையில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை ரோட்டில் இழுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை அள்ளும் பொழுது மழைக்காலம் என்பதால் கையில் உறை இல்லாமல் அள்ளுகி றார்கள். இதனால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு போதிய உபகரணங்கள் எதுவும் கொடுக்காத காரணத்தினால் இவர்கள் கையிலேயே அல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பைகள் அல்லது உடைந்த கண்ணாடி மற்றும்  மருந்து கழிவுகள் ஊசி மற்றும் ரத்த காயங்கள் பட்ட பஞ்சுகள் உள்ளிட்ட கழிவு குப்பைகளை சில பகுதியில் செய்கிறது. இதை இவர்கள் கைகளை அழுவதால் இவர்களுக்கு வேறு மாதிரியான நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது. இதை கவனத்தில் கொண்டு மதுரை மாநகராட்சி இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொடுக்க வேண்டுமெனவும் குப்பைகளை அள்ளி செல்ல வாகன வசதிகள் செய்து தரவேண்டும் எனவும் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!