17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 2 புதிய குளிர்சாதன பஸ் போக்குவரத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 2 புதிய குளிர்சாதன பஸ் போக்குவரத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.

எழுதியவர்: mohan November 4, 2019, 10:28 am

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு தினமும் 2 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் திருவண்ணாமலையிலிருந்து செஞ்சி, மேல்மருவத்தூர் வழியாக சென்னை செல்கிறது. தினமும் காலை 6 மற்றும் 7 மணிக்கும், மாலையில் 5 மற்றும் 6 மணிக்கும் திருவண்ணாமலையில் இருந்து சென்னை புறப்பட்டு செல்லும். அங்கிருந்து காலை 11 மற்றும் 12 மணிக்கும், இரவு 10 மற்றும் 11 மணிக்கும் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு வரும். இந்த குளிர்சாதன பஸ்களில் தானியங்கி கதவுகள், சொகுசு இருக்கைகள், ஒவ்வொரு இருக்கையிலும் செல்போன் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளன. அவசர வழி கதவுகளும் உள்ளது. இந்த பஸ்களுக்கு ரூ.215 டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய குளிர்சாதன பஸ்களின் தொடக்க விழா திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.

விழாவிற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு கொடியசைத்து புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.மேலும் அவர் பஸ்சில் உள்ள வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு இருக்கையில் அமர்ந்து பார்த்தார். விழாவில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், தாசில்தார் அமுல், நகராட்சி ஆணையர் சுரேந்திரன், போக்குவரத்து மண்டல மேலாளர் வெங்கடேசன், துணை மேலாளர் (வணிகம்) கிருஷ்ணமூர்த்தி, உதவி மேலாளர் (இயக்கம்) எம்.பாஸ்கர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், அ.தி.மு.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!