18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திறந்திருக்கும் ஆழ்துளை கிணறு, கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் உயிர்பலி வாங்கும் நடவடிக்கை எடுப்பார்களா.?

திறந்திருக்கும் ஆழ்துளை கிணறு, கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் உயிர்பலி வாங்கும் நடவடிக்கை எடுப்பார்களா.?

எழுதியவர்: Askar November 3, 2019, 4:17 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடர்புளியங்குளம் ஊராட்சியில் உள்ள, கிராமத்தில் 2017, 2018 ம் வருடம் அப்போதைய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ. கே. போஸ் அவர்களால் சுமார் ஐந்து லட்சம் லட்சம் மதிப்பில் ஆழ்துளைக்கிணறு போடப்பட்டது. அதில் நீர் வராத காரணத்தினால் ஆழ்துளை கிணறை மூடாமல் திறந்த வெளியிலேயே திருப்பரங்குன்றம் ஊராட்சி நிர்வாகம் வைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியை அடுத்த மணப்பாறையில் சுஜித் என்கின்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியானது தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதையும் மீறி சில அதிகாரிகள் ஆழ்துளைக்கிணறு கண்முன்னே தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற நிகழ்வு தான் வேடர்புளியங்குளம் கிராமத்தில் உள்ளது இதை மூடுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா இல்லை உயிர் பலி வாங்கிய பிறகுதான் நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

செய்தியாளர் வி. காளமேகம், மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!