18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு பேருந்து கார் மோதி விபத்து. ஒருவர் கால் எலும்பு முறிவு. மற்றொருவர் பேருந்திலிருந்து குதித்து காயம்

அரசு பேருந்து கார் மோதி விபத்து. ஒருவர் கால் எலும்பு முறிவு. மற்றொருவர் பேருந்திலிருந்து குதித்து காயம்

எழுதியவர்: mohan November 3, 2019, 1:07 pm

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும் அரசு பேருந்து ஒன்று தனக்கன்குளம் முல்லை நகர் அருகே மதுரையிலிருந்து கப்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதியது. இதில் கார் முன் சக்கரம் கழன்று பஸ் சக்கரம் முன் போய் விழுந்தது. இதில் காரில் பயணம் செய்த ஓட்டுனருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அரசு பேருந்து திடீரென பிரேக் அடித்தது .அரசு பேருந்து பயணம் செய்த பெண் கண்ணாடியின் உடைத்து முன்புறமாக கீழே விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த மதுரை ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை 108 வாகனம் மூலமாக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் மதுரை திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!