17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரவிழா

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரவிழா

எழுதியவர்: mohan November 3, 2019, 10:15 am

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கண்காணிப்பு வாரவிழா நடைபெற்றது.ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஆய்வாளர் குமாரவேல் லஞ்சம் கொடுப்பதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கி பேசுகையில் , தவறு செய்யும் அதிகாரிகளை தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக உண்மையை வெளி கொண்டு வருமாறும், எங்களுக்கு புகார் வந்தால் லஞ்சம் கேட்பது உண்மை என்று தெரிந்தால் விசாரித்து நேரடியாக உண்மையை நிரூபிப்போம்.லஞ்சம் கொடுப்பதும் குற்றம்,வாங்குவதும் குற்றம், நேர்மையை நிலைநாட்டுங்கள் என்று பேசினார்.மாணவர்கள் ஜோயல்,ஐயப்பன்,ஜனஸ்ரீ ,வெங்கட்ராமன்,கீர்த்தியா ஆகியோர் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.லஞ்சம் ,ஊழல் தொடர்பாக தகவல் தெரிந்தால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.மொபைல் எண் : 9443073558. நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.நிகழ்வில் விஜிலென்ஸ் பிரிவின் அருள்ராஜ்,மது ஆகியோர் விழுப்புணர்வு உறுதிமொழி கூற மாணவர்கள் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!