வெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நாளை(3/11/2019) ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் பொதுவாக மேக மூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.தாய்லாந்து வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதைத் தொடா்ந்து, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத்தாழ்வு பகுதி நவம்பா் 4-ஆம் தேதி உருவாக உள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாள்களில் வடமேற்கு திசையில் நகர உள்ளது. மேலும், இது மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. இதனால், தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது.மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மஹா புயல் இன்று( 2/11/2019)மத்திய கிழக்கு அரபிக்கடலில் குஜராத்துக்கு தெற்கு, தென்மேற்கில் 540 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இந்த புயல் நவம்பா் 4-ஆம் தேதி வரை மேற்கு, வடமேற்கு திசையில் நகரும். அதன்பிறகு, கிழக்கு, வடகிழக்கு திசையில் தெற்கு குஜராத் நோக்கி நகர உள்ளது. இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக மாற உள்ளது. இந்த புயல் காரணமாக, மீனவா்கள் அடுத்த மூன்று நாள்களுக்கு அரபிக்கடல் பக்கம் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் மழை.!
எழுதியவர்: Askar November 2, 2019, 9:26 pm




You must be logged in to post a comment.