17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொன்னமராவதி எஸ். புதூர் அருகே அதிமுக பிரமுகர் அடித்து கொலை.

பொன்னமராவதி எஸ். புதூர் அருகே அதிமுக பிரமுகர் அடித்து கொலை.

எழுதியவர்: mohan November 2, 2019, 1:27 pm

சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் அருகே உள்ள சுள்ளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னய்யா மகன் குமார்  40. விவசாயியான இவர் அதிமுக கட்சியில் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் பதவி வகித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில்  எஸ்.புதூரிலிருந்து சுள்ளாம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குமாரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த குமார் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிழந்தார். இதனை பார்த்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உலகம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமார் மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் உலகம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் கொலையாளிகளை தேடி வருவதோடு கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!