18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 க்கு பின் என்ன படிக்கலாம் கருத்தரங்கு

கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 க்கு பின் என்ன படிக்கலாம் கருத்தரங்கு

எழுதியவர்: mohan November 2, 2019, 1:21 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 க்கு அடுத்து என்ன உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு நடந்தது. பி.எஸ்சி உளவியல் துறை 3 ஆம் ஆண்டு மாணவி சுமையா கிராத் ஓதினார்.கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா தலைமை வகித்தார். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை உதவி பேராசிரியை ஏ.ராதா வரவேற்றார்.கல்வி உதவித்தொகையுடன் வேலை வாய்ப்பிற்கான உயர்கல்வி குறித்து தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியை எஸ்.பாத்திமா ருஸ்தா பேசினார். சென்னை சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் அல்ஹாஜ் காலித் ஏ.கே.புஹாரி வாழ்த்துரை பேசினார். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஆர்.கண்ணதாசன் தன்னம்பிக்கை உரை பேசினார். உயர் கல்வி குறித்து மாணவியரின் சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள், பேராசிரியைகள் விளக்கம் அளித்தனர். கல்லூரி மாணவியர் பேரவை தலைவி எச்.மரியம் அபிரா நன்றி கூறினார்.சீதக்காதி அறக்கட்டளை துணை மேலாளர் ஷேக் தாவூது, கல்லூரி துணை முதல்வர்கள் ரஜனி, சுலைஹா ஷகீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் கவுரி, கலைப்புல ஆணையர்கள் ஜாஸ்மின் (கலை), பண்பரசி பாத்திமா (அறிவியல்), நஜிமுதீன் ஹாஜியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!