17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் ஆபத்தான நிலையில் இரும்பு மின் கம்பம்-மின்வாரியத்துறை கண்டுகொள்ளுமா?

நெல்லையில் ஆபத்தான நிலையில் இரும்பு மின் கம்பம்-மின்வாரியத்துறை கண்டுகொள்ளுமா?

எழுதியவர்: mohan November 2, 2019, 11:23 am

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் புதியதாக மாற்றியமைக்கப்படும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக தற்போது தற்காலிக பேருந்து நிலையம் நெல்லை டவுண் அரசு பொருள்காட்சி திடலில் இயங்கி வருகிறது.நெல்லை டவுண் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் பேருந்து நிலையம் உள்ளே செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் மின் கம்பத்தில் உள்ள ஒரு மின் கம்பி வெளியே தெரிந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகில் தான் பேருந்துகள் சென்று வருகிறது.

ஆபத்தான இந்த கம்பியை அகற்றி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மின்வாரியத்திற்கு சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தற்காலிக பேருந்து நிலைய நுழைவாயிலில் சாலை குண்டும் குழியுமாக மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையையும் விரைந்து சீரமைக்க கோரியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!