17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் குழந்தை பிறந்த இரண்டே வாரத்தில் தாய் உயிரிழந்த சோகம், மர்ம மரணம் குறித்து போலிசார் விசாரனை

உசிலம்பட்டியில் குழந்தை பிறந்த இரண்டே வாரத்தில் தாய் உயிரிழந்த சோகம், மர்ம மரணம் குறித்து போலிசார் விசாரனை

எழுதியவர்: mohan November 2, 2019, 11:16 am

உசிலம்பட்டி அருகே குழந்தை பிறந்த இரண்டே வாரத்தில் தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, தாயின் மர்ம மரணம் குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த கார்த்திக் மனைவி தீபா என்ற பெண்ணுக்கு ஏற்கனவே தனுஷா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக கருத்தரித்த தீபா கடந்த அக்டோபர் 18ஆம் தேதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலைத்தில் அறுவை சிகிச்சை செய்த தையல்களை பிரித்துவிட்டு வீட்டிற்கு சென்றவருக்கு நேற்று இரவு மயக்கம் வரவே தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தாகவும், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சிகிச்சையில் ஏதேனும் தவறு ஏற்பட்டு உயிரிழந்தாரா?, வேறு ஏதேனும் குறைபாட்டால் ஏற்பட்ட மரணமா? என உசிலம்பட்டி தாலுகா போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!