17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அண்ணன் இறந்தது தெரியாமல் தள்ளு வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு இழுத்து சென்ற தங்கை.

அண்ணன் இறந்தது தெரியாமல் தள்ளு வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு இழுத்து சென்ற தங்கை.

எழுதியவர்: Askar November 1, 2019, 8:39 pm

தமிக-புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் இயங்கி வரும் செங்கல் சூளையில் விழுப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி பணிபுரிந்து வந்தார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து  அருகில் உள்ள புதுவை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஆம்புலன்ஸ் கேட்கப்பட்டது. தமிழக பகுதி என்பதால் ஆம்புலன்ஸ் வழங்க புதுச்சேரி அரசு மறுத்துவிட்டது. செங்கல் சூளையில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அவரது தங்கை மூலம் அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சுப்பிரமணி இறந்துவிட்டதாக கூறினர். இறந்தவரின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல, புதுவை காவல்துறையின் உதவியுடன் மாற்று ஏற்பாடு செய்து, சுப்பிரமணி உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!