17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை திருக்கோயில் அவல நிலைகளை நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணி சார்பாக மனு

திருவண்ணாமலை திருக்கோயில் அவல நிலைகளை நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணி சார்பாக மனு

எழுதியவர்: mohan November 1, 2019, 8:09 pm

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் அவல நிலைகளை நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணி சார்பாக மனு அளித்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருவிழா நாட்களில் சுவாமி வெளியே வரும் வீட்டு வாசற்படியில் மேற்கூரையில் மழை நீர் வருகிறது. கோவிலை சுற்றியுள்ள மதில் சுவர்கள் பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே செடிகளை பிடுங்கி எடுத்து வரும் பக்தர்களை பிச்சைக்காரர்களின் தொல்லையால் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை சிறப்பு தரிசனம் என்ற பெயரில் ஏமாற்றி தரிசனம் செய்ய புரோக்கர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதை கடந்த ஆண்டு மாவட்ட நீதிபதி மகிழேந்தி தலைமையில் 15 பேர் மீது நடவடிக்கை எடுத்த பிறகும் மீண்டும் கோயிலில் எப்படிவந்தனா்என்று தெரியவில்லை. அதில் ஐந்து நபர்கள் மட்டும் கோவிலின் உள்ளே உள்ளனர். இதைப் பற்றி இந்து முன்னணியினர் மனு கொடுத்து கேட்டபோது ஆதாரபூர்வமாக பிடித்துக் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக திரு கோவில் இணை ஆணையர் கூறி வருகிறார் .கோவிலில் பக்தர்கள் வாங்கும் பிரசாதத்தின் அளவு 100 கிராம் எனக் கூறுகின்றனர். ஆனால் இந்து முன்னணியினர் வாங்கி அதை எடை போட்டபோது குறைவாக உள்ளது இதை பற்றியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உடுக்கை அடிக்கும் போராட்டம் நடைபெறும் எனவும்  இந்து முன்னணியினர் மாவட்ட செயலாளர்கள் அருண் குமார் செந்தில் ஆகியோர் தெரிவித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பின்போது துரைராஜ் நகர பொதுச்செயலாளர் சிவா ஒன்றிய செயலாளர் அருண் நகர செயலாளர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!