18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக அரசு சார்பில், ‘தமிழ்நாடு நாள்’ முதல் முறையாக மாநிலம் முழுவதும் இன்று…

தமிழக அரசு சார்பில், ‘தமிழ்நாடு நாள்’ முதல் முறையாக மாநிலம் முழுவதும் இன்று…

எழுதியவர்: Askar November 1, 2019, 5:24 pm

தமிழக அரசு சார்பில், ‘தமிழ்நாடு நாள்’ முதல் முறையாக மாநிலம் முழுவதும் இன்று கொண்டாப்படுகிறது.

1956-ஆம் ஆண்டு இதே நாளில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. 63 ஆண்டுகள் ஆன நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி ‘தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நாளை கொண்டாட பத்து லட்சம் நிதியை ஒதுக்கி கடந்த 21-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு வளர்ச்சித்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில், ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது. கவியரங்கம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கவுள்ளனர். தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டத்தையொட்டி, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டபேரவை மற்றும் நுழைவாயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!