நிலக்கோட்டை கண்ணன் கோயில் தெரு நடுவே மின்கம்பம் இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையிலும் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையிலும் உள்ளது. எனவே இதை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இத்தெருவிற்குள் மினரல் வாட்டர் வேன், ஆட்டோ போன்ற வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளது. அவசரகாலங்களில் ஆம்புலன்சும் இத்தெருவிற்குள் நுழைய முடியாத அவலம் உள்ளது. இதுகுறித்து நிலக்கோட்டை மின்வாரியத்தில் பலமுறை புகார் செய்தனர்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனியும் தாமதப்படுத்தாமல் மின்கம்பத்தை தெருவின் ஓரமாக மாற்றியமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூகஆர்வலர் ஜோசப் கோவில் பிள்ளை கூறுகையில், ‘மின்வாரிய அதிகாரிகளிடம் நேரிலும் தபாலிலும் பலமுறை புகார் செய்து விட்டோம். ஆனால் இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை. மின்கம்பம் தெரு நடுவே இருப்பதால் பள்ளி ஆட்டோக்களும் வரமுடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவ,மாணவிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மின்கம்பத்தை மாற்றியமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றார்.




You must be logged in to post a comment.