17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் முஹமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி 9வது ஆண்டு விழா , விளையாட்டு விழா

ராமநாதபுரம் முஹமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி 9வது ஆண்டு விழா , விளையாட்டு விழா

எழுதியவர்: mohan November 1, 2019, 3:04 pm

ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி 9வது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டுவிழா நடந்தது. பள்ளி முதல்வர் நந்தகோபால் தலைமை வகித்தார்.மாணவி ஷெரின் பானு கிராத் ஓதினார். விளையாட்டு விழாவை உச்சிப்புளி கப்பல் படைத்தளம் ஐஎன்எஸ் பருந்து கேப்டன் வெங்கடேஷ் ஆர். ஐயர் தொடங்கி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் . விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்குஉச்சிப்புளி கப்பல் படைத்தளம் ஐஎன்எஸ் பருந்து லெப்டினன்ட் விவேகானந்தன் பரிசு வழங்கினார். விழாவில் மாணவர்கள் பிரமிடு யோகா, கராத்தே, சிலம்பம் சாகசம் நிகழ்த்தினர். பள்ளியில் ஒவ்வொரு வகுப்புகளிலும் முதலாம், இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ், ராமநாதபுரம் முதல் நிலை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஜெ. ஜெனிதா ஆகியோர் பரிசு வழங்கினர். ஆண்டு விழாவிற்கு வந்திருந்த பெற்றோருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.ராமநாதபுரம் ரோட்டரி சங்க இயக்குநர் சண்முக ராஜேஸ்வரன், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட், தீனதயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவி அப்ஸின் நிஷா நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!