17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உசிலம்பட்டி அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எழுதியவர்: mohan November 1, 2019, 1:41 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிக்குட்டி (45).விவசாயக்கூலி வேலை பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி பஞ்சம்மாள் (40).இவர்களுக்கு ரஷிகா (19) என்ற மகள் உண்டு.கணவன் மனைவிக்கிடையில் பணம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் மணிக்குட்டி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வெளியூர் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பஞ்சம்மாள் வீட்டில் தனியாக இருக்கும் போது சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.சம்பவமறிந்த உத்தப்பநாயக்கனூர் போலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்;து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!