17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு.!

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு.!

எழுதியவர்: Askar November 1, 2019, 1:15 pm

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 76 ரூபாய் அதிகரித்து 696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தியாவின் சமையல் எரிவாயுவின் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் 620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மானியமில்லா எரிவாயு சிலிண்டர் 76 ரூபாய் அதிகரித்து 696 ரூபாய்க்கு விற்பனை செய்யபப்டுகிறது. சென்னையில் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைக் கொண்ட எரிவாயு சிலிண்டர் 120 ரூபாய் அதிகரித்து ஆயிரத்து 319 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!