17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாட்ஸ் அப்பில் வேவு பார்கப்பட்டதாக புகார், மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் வேவு பார்கப்பட்டதாக புகார், மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.

எழுதியவர்: Askar November 1, 2019, 12:00 pm

பத்திரிகையாளர்கள் வாட்ஸ் அப்பில் வேவு பார்க்கப்பட்டதாக புகார்-வாட்ஸ் அப் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.

இந்தியப் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரை இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனம், வாட்ஸ்அப் மூலம் வேவு பார்த்தது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமமானது, வாட்ஸ்அப்பில், பெகாசஸ் என்ற வேவுபார்க்கும் மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியப் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் தகவல்களை திருடியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து உரிய விளக்கத்தை அளிக்குமாறு, வாட்ஸ் அப் நிறுவனத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது.இந்தியாவிலிருந்து எத்தனை வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்கள் திருடப்பட்டன என்பது குறித்த விவரங்களும் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!