18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » கீழக்கரையில் கடைகள் முழு அடைப்பு, இயல்பு வாழ்கை பாதிப்பு…

கீழக்கரையில் கடைகள் முழு அடைப்பு, இயல்பு வாழ்கை பாதிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் April 25, 2017, 11:43 am

தமிழகத்தில் இன்று பிரதான எதிர்கட்சியான திமுக விவசாயிகளுக்கு ஆதரவாக முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விட்டிருந்தது.  இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் உட்பட அனைத்து தோழமைக் கட்சிகள் மற்றும் பெரும்பாலான தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு வழக்கம் போல் பேருந்துகள் மற்றும் அரசு அலுவலகங்கள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  ஆனால் இன்று கீழக்கரையில் அனைத்து வணிக வளாகங்களும், கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.  அரசு அலுவலகங்களும் வெறிச்சோடியே காணப்படுகிறது.  சில அரசுப்பேருந்துகள் மட்டும் காவல்துறை பாதுகாவலுடன் இயக்கப்படுகிறது.

மேலும் அரசு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  ஆகையால் கீழக்கரையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!