தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அகே கெண்டேனஅள்ளி ஊராட்சி சாஸ்திரமுட்லு கிராமத்தில் உள்ள உப்புபள்ளம் ஆற்றில் இருந்து மழைநீர் தற்போது சுமார் 50கனஅடி நீர் வீணாக சின்னாற்றில் கலப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, அத்திமுட்லு, சாஸ்திரமுட்லு, கெண்டேனஅள்ளி, சந்திராபுரம் உள்ளிட்ட கிராம பகுதியில் அதிக அளவில் விவசாயம் சார்ந்த பகுதியாகவே உள்ளது. இங்கு பிரதான தொழில் காய்கறி, பூக்கள், வாழை, தென்னை, நெல் போன்றவை விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 15ஆண்டுகளாக பருவமழை, மற்றும் இயற்கை ஏமாற்றியதால் விவசாய தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கூலி தொழிலாளியாக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டனர். இதனால் இப்பகுதியில் ஒரு சில விவசாயிகள் மட்டுமே குறைந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக சாஸ்திரமுட்லு ஏரி கடந்த 35ஆண்டுகளுக்கு முன்பு மழைநீரை சேமிக்க கட்டப்பட்டது. இந்த ஏரிக்கு மேற்க்கு தொடர்ச்சி மழைகளின் ஆரம்பமான பெட்டமுகிலாம், நாமகிரிபேட்டை காப்பு காடுகலிருந்து வருடத்தில் அதிக அளவு மழைநீரை கொடுத்து வருகின்றது.
இந்த மழைநீர் சாஸ்திரமுட்லு ஏரிக்கு வரும் ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் சாஸ்திரமுட்லு ஏரி உடைப்பு ஏற்பட்டு மழைநீர் வீணாக சின்னாற்றில் கலந்தது. இதையாடுத்து சாஸ்திரமுட்லு ஏரி இதுவரை புரணமைப்பு செய்யாமல் இருப்பதால் காப்பு காட்டு பகுதியில் இருந்து வருட முழுவதிலும் சுமார் 2டிஎம்சி தண்ணீர் விணாகி வருகின்றது. மேலும் தற்போது தென்மேற்க்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சாஸ்திரிமுட்லு ஏரி மற்றும் காப்புகாட்டு பகுதியில் இருந்து 50கனஅடி நீர் தொடர்ந்து வருவதால் மழைநீரை சேமிக்க முடியாமல் விணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக இப்பகுதியில் புதிய நீர்தேக்கம் அமைத்து இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.