17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் பேருந்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை-நெல்லையில் பரபரப்பு

தனியார் பேருந்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை-நெல்லையில் பரபரப்பு

எழுதியவர்: mohan November 1, 2019, 9:48 am

நெல்லை அருகே தனியார் சொகுசு பேருந்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகர் கோவிலை சேர்ந்தவர் டாவ்சன் டேனியல். சென்னையில் தங்கி பணி புரிந்து வரும் இவரின் மகளுக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் இதற்காக டேனியல் நாகர்கோவிலில் உள்ள உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுப்பதற்காக குடும்பத்துடன் சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்தில் நாகர் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.இந்நிலையில் ஒரு பையில் 25 பவுன் எடையுள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வைத்து எடுத்து வந்துள்ளார். நெல்லையை கடந்து பேருந்து நாங்குநேரி அருகே சென்றபோது டாவ்சன் டேனியல் பைகளை எடுத்து அடுக்கி வைத்த போது நகைகள் இருந்த பையை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த டாவ்சன் டேனியல் உடனடியாக பஸ்சில் இருந்து இறங்கி நாங்குநேரி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!