18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விதிகளை மீறும் வாகனங்கள் இனி தப்ப முடியாது

விதிகளை மீறும் வாகனங்கள் இனி தப்ப முடியாது

எழுதியவர்: mohan November 1, 2019, 9:41 am

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்பொழுது முதற்கட்டமாக 8 இடங்களில் ANRP எனப்படும் (Automatic Number Plate Recognition) கேமராக்கள் காவல்துறையினரால் பொருத்தப்பட்டுள்ளது. இக்கண்காணிப்பு கேமராக்கள் விதிகளை மீறும் வாகனங்களின் எண்களை இரவிலும், பகலிலும் பதிவு செய்து நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வசதி கொண்டது. விதிமீறி செல்லும் வாகனங்களின் எண்கள் கண்காணிக்கப்பட்டு வாகன உரிமையாளரின் வீட்டிற்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்படும். எனவே, வாகன ஓட்டிகள் விதிகளை மீறாமல் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!