17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செய்தியாளர் பாரதி மீது தாக்குதல் “சத்தியப்பாதை” துணை ஆசிரியர் கண்டனம்.

செய்தியாளர் பாரதி மீது தாக்குதல் “சத்தியப்பாதை” துணை ஆசிரியர் கண்டனம்.

எழுதியவர்: Askar November 1, 2019, 8:44 am

பத்திரிக்கையாளர் கடையம் பாரதியை தாக்கிய பாவூர்சத்திரம் காவல் உதவி ஆய்வாளரை வன்மையாக கண்டிக்கிறோம்.!

நேர்கொண்ட பார்வையும் உறுதிமிக்க உண்மை தன்மையுடன் செயல்பட்டு வரும் பத்திரிக்கையாளர் கடையம் பாரதி அவர்களை பாவூர்சத்திரம் உதவி ஆய்வாளர் உள்நோக்கத்தோடு வன்மத்துடன் தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த பாரதி பாவூர்சத்திரத்திற்கு செய்தி எடுக்க சென்ற போது அங்கு பணியில் இருந்த பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சின்னத்துரை அவதூறாக பேசியும் ஒட்டு மொத்த பத்திரிக்கையாளர்களை தரம் தாழ்த்தி பேசி உள்ளார்.

இது குறித்து செய்தியாளர் பாரதி உதவி ஆய்வாளரிடம் கேட்கவே எதிர்த்து பேசுகிறாயா என்று செல்போன், ப்ர்ஸ், பைக் சாவி உள்ளிட்டவற்றை பறித்து , பூட்ஸ் காலால் முகத்தில் எட்டி உதைத்து அடித்து இழுத்து சென்றுள்ளார், பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாக செய்தியாளர் கடையம் பாரதியை தாக்கி உள்ளார்.

இதற்கு சாட்சியாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் உள்ள சி சி டிவி காட்சிகள் பதிவாகி உள்ளது.

அநாகரீகமான முறையில் அத்துமீறி பத்திரிகை நண்பர் கடையம் பாரதி அவர்களை வன்மத்துடன் தாக்கிய உதவி ஆய்வாளர் சின்னத்துரை மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு எழுத்து உரிமை, பேச்சுரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் உதவி ஆய்வாளரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்.

இப்படிக்கு அக்ரி பரமசிவன் சத்தியப்பாதை துணை ஆசிரியர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!