18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா வெலிங்டன் அருகே பல காலமாக மோசமான நிலையில் உள்ள பிருந்தாவன் மவுண்பிளசண்ட் சாலை…

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா வெலிங்டன் அருகே பல காலமாக மோசமான நிலையில் உள்ள பிருந்தாவன் மவுண்பிளசண்ட் சாலை…

எழுதியவர்: Askar November 1, 2019, 12:12 am

நீலகிரி  மாவட்டம் குன்னூர்  தாலுகா  வெலிங்டன்  அருகே உள்ள பிருந்தாவன் மவுண்பிளசண்ட் சாலை பல காலமாக மோசமான நிலையில் உள்ளது. இது குறித்து சம்மந்த பட்ட துறைக்கு மோசமான  சாலையின் புகைபடத்துடன் புகார் அளித்தும்  இது வரை நடவடிக்கை  மேற்கொள்ள படவில்லை.

இது இந்த மோசமான  சாலையின் தற்போதைய புகைபடம் மிகவும் மோசமான. நிலையில் உள்ள சாலையினை சரிசெய்ய. சம்மந்தபட்ட. துறை ஏன் நடவடிக்கை  எடுப்பதில் தாமதம் காட்டுவது ஏன்? கண்டும் காணாமல் செல்வது ஏன்? இந்த சாலையில் குன்னூர்  நகர பேருந்து மினி பேருந்து புல்மோர் குழந்தைகள் பள்ளி வாகனம் தனியார் வாகனங்கள்  செல்லுகின்றன. இவ்வுளவு முக்கியதுவம் வாய்ந்த சாலையினை சரி செய்ய தாமதம் காட்டுவது ஏன்? பொதுமக்கள் குழந்தைகள் வாகன விபத்து அல்லது உயிர்பலி ஏற்பட்ட பின்பு சரிசெய்யலாம் என காத்திருக்கின்றனரா இதன்  சம்மந்தபட்ட. துறையினர்? பல முறை புகார் அளித்தும் சாலையினை சரிசெய்யாதது ஏன் என்ற குழப்பத்தில் இந்த பகுதி   பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் இருக்கின்றனர்.

இது சம்பந்தமாக நீலகிரி  மாவட்ட  ஆட்சியர்   பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள்  உயிர்களை எண்ணி  இது வரை சீரமைக்கபடாத இந்த  சாலையினை சீரமைக்க  நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பதே  இந்த பகுதி பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின்  வேண்டுகோளாக உள்ளது.

நீலகிரி  மாவட்ட நிருபர்  ரமேஷ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!