18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாடு தினம்

சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாடு தினம்

எழுதியவர்: mohan October 31, 2019, 4:26 pm

சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை கோட்டம் தெற்கு ரயில்வே சார்பாக இன்று 31.10.2019 தேசிய ஒருமைப்பாடு தினம் அனுசரிக்கப்பட்டது. சர்தார் வல்லபாய் படேல் உருவப்படத்திற்கு கோட்ட ரயில்வே மேலாளர் வி. ஆர். லெனின் மலரஞ்சலி செலுத்தினார். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர்கள் லலித் குமார் மன்சுகானி, ஒ.பி.ஷாவ், கோட்ட ஊழியர் நல அதிகாரி சுதாகரன், கோட்ட பாதுகாப்பு அதிகாரி ஜெகநாதன் ஆகியோர் சர்தார் வல்லபாய் படேலின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

கோட்ட ரயில்வே மேலாளர் வி. ஆர் லெனின் தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி வாசிக்க ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர். கோட்ட ரயில்வே மேலாளர் ரயில்வே பாதுகாப்பு படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், சாரண, சாரணியர் மற்றும் ரயில்வே இருபாலர் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற ஓட்டத்தை கோட்ட ரயில்வே மேலாளர் துவக்கிவைத்தார். மதுரை கோட்டத்திற்குட்பட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தேசிய ஒருமைப்பாடு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!