18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

எழுதியவர்: mohan October 31, 2019, 12:58 pm

தேசிய ஒற்றுமை நாளான  மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் காவல் துணை ஆணையர் தலைமையிடம் மகேஷ் ., காவல் துணை ஆணையர் குற்றம் முனைவர் செந்தில்குமார்  காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் காவல் அமைச்சு பணியாளர்கள் அனைவரும் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைபாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு எங்களையே உவந்தளிப்போம் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவோம் என்றும் உளமார உறுதியளிக்கிறோம் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கபட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நாங்கள் இந்த உறுதிமொழியினை ஏற்கிறோம். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எங்களது பங்களிப்பினை நல்குவோம் என்றும் உளமார உறுதியளிக்கிறோம் என்றும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!